ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிசம்பர் மாதத் துக்கான விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடை பெற்ற கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவல கங்களில் விவசாயிகள் பங்கேற்க சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன. இதில், பங்கேற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை வேளாண் உதவி இயக்குநர்களிடம் அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வட்ட அளவிலும், கோட்ட அளவிலும் மாதத்துக்கு ஒருமுறை குறைதீர்வுக் கூட்டத்தை நடத்த வேண் டும் என்று கோரிக்கை வைத்தனர். உரங்கள் ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்படுவதா கவும் புகார்களை தெரிவித்தனர். ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தக்கோலத் தில் பச்சைப் பயறுக்கு என தனியாக நேரடி கொள் முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சி யர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்) விஸ்வநாதன், வேளாண் அலுவலர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago