‘எருது விடும் விழா நடத்த ஆன்லைனில் விண்ணப்பம்’

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் எருது விடும் விழா நடத்த ‘ஆன்லை னில்’ விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்துவது தொடர்பான விண்ணப்பங்கள் ‘ஆன்லைன்’ மூலம் மட்டுமே பெறப்படும். vellore.nic.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே அரசிதழில் பதிவு பெற்ற அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே எருது விடும் திருவிழா நடத்தப்படும்.

புதிய இடங்களில் விழா நடத்த அனுமதி இல்லை. வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மட்டுமே எருது விடும் விழா நடத்த அனுமதிக்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்யப்படாத எந்த ஒரு விண்ணப்பமும் ஏற்கப்பட மாட்டாது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விழா நடத்த வேண்டும்’’என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்