மின்தடை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மின்வாரியம் புதிய எண்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரோடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் கணினி மயமாக்கப்பட்ட மின் தடை பதிவு மையமானது, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் பவானி தொகுதியில் கவுந்தப்பாடி, பெருந்தலையூர் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மின்வாரிய பணியாளர்களுக்கும் பொது இணைப்பு பெறும் வகையிலான சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால், மின் தடை புகார்கள், புகார் மையத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் பழுது நீக்கும் களப்பணியாளர்களுக்கு கணினி மூலம் தகவல் அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதி மக்கள் மின்தடை பற்றிய புகார்களை 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி எண் - 1912, 1800-425-11912 மற்றும் 0424-2260066, 0424-2240896 தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். மின் கம்பம் சாய்ந்து விழுந்தாலோ, மின் கம்பி அறுந்து விழுந்தாலோ 9445851912 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு படத்துடன் புகார்களைத் தெரிவிக்கலாம். தனி நபர் மின் தடை புகார்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சரி செய்யப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago