சிறுபான்மை வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்குவிண்ணப்பிக்க காலநீட்டிப்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்தவர்கள் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவ்வகுப்பைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக் கலாம். இத்திட்டம் தொடர்பாக மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள், http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்