மழையால் பாதித்த விவசாய நிலங்களுக்கு நிவாரணம் வழங்க எம்எல்ஏ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய நிலங்களுக் கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் 3,72,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், கடந்த மாதம் ஏற்பட்ட நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த தொடர் மழையால், கதிர் வரும் நிலையில் இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், கதிர்கள் பதாரகும் என்பதால், விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நடைபெற்றுவரும் நிவாரண கணக் கெடுப்பில் ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு மட்டும் நிவார ணம் வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது விவசாயி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நெல் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 செலவாகின்றது. எனவே, இதை கருத்தில்கொண்டு காலம் தாழ்த்தாமல் அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்பின் அடிப்படை யில் ஏக்கருக்கு ரூ.30,000 நிவார ணமாக உடனடியாக வழங்க வேண்டும். மேலும், உரிய நேரத்துக்குள் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல, பொங்கல் கரும்பு களுக்கு தோட்டக்கலை பயிர்களில் உரிய அங்கீகாரம் அளித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புதிய ரக கரும்புகளை கொண்டு வர வேண்டும். பொங்கல் கரும்புகளுக்கு பயிர்க் காப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட பொங்கல் கரும்புகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்