திருவண்ணாமலை அருகே வீடு புகுந்து விவசாயியை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற வெளி மாவட்ட கொள்ளை கும்பலை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி, 10 பவுன் நகை, 400 கிராம் வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இது குறித்து தண்டராம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தி.மலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளது உறுதியானது. இதையடுத்து, கொள்ளையர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “வெவ்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருந்து அவர்கள் வெளியே வந்ததும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வீடுகளை தேர்வு செய்து கொள்ளையடித்துள்ளனர்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago