வாணியம்பாடி தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய குமாரிடம், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம்பாஷா கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
‘‘திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியில் பல மாதங் களாக தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களை வழிமறித்து அவர்களை தாக்கி செல்போன், நகை, பணம் பறிப்பது போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும், வீடு புகுந்து கொள்ளை யடிப்பது, ஆயுதங்களை காட்டி வழிப்பறிசெய்வது, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருட்டு போன்றவை தினசரி நடந்து வருகி றது. இதனால், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருட்டு சம்பவங்கள் குறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்தால் அங்கு வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை. குறிப்பாக, வாகன திருட்டில் புகாரை வாங்கவே மறுக்கிறார்கள்.
எனவே, வாணியம்பாடி பகுதி யில் நடக்கும் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டு வழக்கு தொடர்பாக புகார்அளித்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிடவேண்டும். மேலும், வாணியம்பாடி தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியுள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையால் அதிக குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதால் அந்த கடையை அகற்ற வேண்டும். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago