அரசியலுக்கு யார் வந்தாலும் அதிமுக, பாஜக கூட்டணியை காப்பாற்ற முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெரியாரின் நினைவு தினத்தை யொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அவரது சிலைக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “தமிழ் மண்ணுக்காக தன்னை அர்ப் பணித்துக் கொண்டவர் பெரியார். அவர் மறைந்தாலும், அவரது கொள்கைகளை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய தேவை யும், அவசியமும் உள்ளது. பாஜக வின் மதவெறி, இந்தியாவில் வேக மாக பரவி வருகிறது. பெரும் பான்மை மக்களையும், சிறு பான்மை மக்களையும் மோதவிட்டு, நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்துகிறது.
இதற்கு, பழனிசாமி அரசு துணை போகிறது. நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டம், குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்திவிட்டு, தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் கேடயமாக இருப்போம் என முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார். நாடு முழுவதும் சாதிய கொடுமைகள் கடைபிடிக்கப்படுவது வேதனை யாக உள்ளது.
திமுக கூட்டணியின் இலக்கு
8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முயன்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும்.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் திமுக கூட்டணியின் இலக்கு. அதிமுக அமைச்சர்களின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காக, மோடிக்கு அதிமுகவினர் காவடி தூக்குகின்றனர். தேர்தலில் ரஜினி, கமல் போட்டியிடுவதால், திமுக கூட்டணிக்கு பாதிப்பு கிடையாது. அரசியலுக்கு யார் வந்தாலும், அதிமுக மற்றும் பாஜகவை எதிர்ப்பதில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர். அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை தமிழகத்தில் காப்பாற்ற முடியாது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago