ஜன 1-ம் தேதி முதல் எம்ஆர்பி விலையில் மது விற்பனை?

By செய்திப்பிரிவு

வேலூரில் டாஸ்மாக் பணி யாளர்கள் சங்கத்தின் (ஏஐடியுசி) ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தின் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஜி.லதா தொடங்கி வைத்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் பங்கேற்றுப் பேசினார். ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து மாநிலப் பொருளாளர் கோவிந்த ராஜ் விளக்கினார்.

கூட்டத்தில், கூடுதல் விலைக்கு மதுபானங் கள் விற்பனை செய்வது முழுமையாக தடுக்க வேண்டும். இதற்காக, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் எம்ஆர்பி விலையில் மட்டுமே மதுபாட்டிலை விற்பனை செய்யப்படும். மதுபானங்களின் விற்பனையை கருத்தில் கொண்டு ரசீது புத்தகங்கள் 20 சதவீதம் அளவுக்கு இருப்பில் இருக்கும் வகையில், மதுபானக் கடை களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ரசீது புத்தகங்களை வழங்க வேண்டும்.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மதுபானக் கடைகளில் பில்லிங், சேல்ஸ் என இரண்டு கவுன்டர்கள் இருக்க வேண்டும். மதுபானக் கடைகளில் சேதமடையும் மது பாட்டில்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மதுபானக் கடைகளின் வாடகை, மின் கட்டணம், துப்புரவுப் பணியாளர் ஊதியம் போன்றவற்றை நிர்வாகமே நேரடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்