ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (AEPC) மற்றும் இந்தியத் தூதரகம், மாட்ரிட்,ஸ்பெயின் இணைந்து இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் மற்றும்ஸ்பெயின் பையர்களுக்கு இடையே மெய்நிகர் (பி2பி) ‘‘India-Spain Synergies in Apparel and Textiles” என்ற சந்திப்பை இணையத்தில் நேற்று நடத்தியது.
ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய துணைத் தூதர் மதன் சிங் பண்டாரி பேசும்போது, "ஸ்பெயினில் இந்திய தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புள்ளது. ஸ்பெயினின் ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவு. சமீப காலங்களில் இந்தியா பலகட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மருத்துவ ஜவுளி பிரிவில் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழை (Man Made Fiber) சார்ந்த ஆடைகளை ஆதரிக்கும்திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று நோயை இந்தியா திறம்பட கட்டுப்படுத்தியுள்ளது" என்றார்.
இந்திய ஆடைகளின் கண்காட்சிக்காக 24x7 மெய்நிகர் தளத்தை (Virtual Platform for exhibition of Indian Apparels) அமைத்ததற்காக, ஏஇபிசி-யை அவர் வாழ்த்தினார்.
ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல் பேசும்போது, "கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மருத்துவ ஜவுளி, தொழில்நுட்ப ஜவுளி மற்றும் எம்.எம்.எஃப். அடிப்படையிலான ஆடைகள் ஆகியவற்றின் உற்பத்தியை வளர்த்ததால், கரோனா நெருக்கடி காலத்தில் ஒரு வாய்ப்பாக மாறியது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, சில மாதங்களில் உலகில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) உற்பத்தியில் 2-வது பெரிய நாடாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார். ஸ்பெயினில் இருந்து சில முன்னணி பிராண்ட் உட்பட 55பையர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து 43 ஆடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.
சில பையர்கள் விநியோக தாமதங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்பியபோதிலும், இந்திய மருத்துவ ஜவுளி உள்ளிட்ட ஆடைகளை சந்தைப்படுத்த பலர் ஆர்வம் காட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago