திருப்பூர் மாவட்ட மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ஏ.சரவணன், தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக ஒப்பந்ததொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
2007-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கல்வி தகுதியை அடிப்படையாகக் கொண்டு மஸ்தூர், கள உதவியாளர் ஆகிய பதவிகளில் 21,600 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
ஆட்சி மாற்றத்துக்கு பிறகு,2012-ல் இருந்து தற்போது வரை எந்த ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்யவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற பிறகும், பணி நிரந்தரம் செய்யப்ப டவில்லை.
2007-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்தவர்களை அடையாளம் கண்டு, பணி நிரந்தரம் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு குழுவை மின்சார வாரியம் கலைத்துள்ளது. இது, தொழிலாளர் விரோத போக்குநடவடிக்கையாகும்.
இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்வதுடன், மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago