‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்’

By செய்திப்பிரிவு

திருப்பூர் வேளாண்மைத் துறையினர் வெளியிட்ட அறிக்கையில், "உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் கடன் வேண்டி வங்கிகளை அணுகும்போது, அடமானம் கோருவதுடன் வங்கியில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். இதைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு, வங்கிகள் மற்றும் நாப்கிசன் நிறுவனத்துக்கு 50 சதவீத உத்தரவா தத்தை தமிழக அரசு வழங்குகிறது.

தற்போது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது, வணிக நடவடிக்கைகளுக்கு வழங்குவதுபோல 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை 8 முதல் 9 சதவீதமாக குறைக்கும் வகையில், தமிழக அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உழவர்உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும்.

இத்திட்டத்தை செயல் படுத்த, கடந்த ஆகஸ்ட் மாதம் வேளாண்மை விற்பனை, வணிகத் துறை மற்றும்நாப்கிசன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்ததிட்டத்தை அரசு செயல்படுத்துவதால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தொடர்பு கொண்டு பயன்பெறலாம்" என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்