கரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உதவிக்குழு, ஒப்பந்த மற்றும் தினக்கூலி துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கம் செய்யப்பட்ட ஊதிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும், நெரிஞ்சிப்பேட்டை மற்றும் சென்னிமலை பேரூராட்சிகளில் பணியின் போது உயிரிழந்ததுப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதுடன், கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க வேண்டும், கரோனா தடுப்பு கால சிறப்பு ஊதியத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் மாரப்பன், பொதுச்செயலாளர் எஸ்.மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago