கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 1410 வழக்குகளுக்கு தீர்வு

By செய்திப்பிரிவு

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜி.குலசேகரன், செயலர்(பொறுப்பு) மற்றும் இரண்டாவதுசார்பு நீதிபதி பி.செல்லதுரை முன்னிலை வகித்தனர். இதில், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள் என மொத்தம் 4,204 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 333 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த தீர்வுத் தொகை ரூ.9.84 கோடி.

நீதிபதிகள் எம்.குணசேகரன், கே.பூரண ஜெயஆனந்த், டி.மலர் வாலன்டினா, ஏ.மணிமொழி, ஏ.எஸ்.ரவி, பி.குமார், கே.முனிராஜா, எஸ்.சந்தானகிருஷ்ணசாமி, என்.ஞானசம்பந்தம், என்.தமிழ் இனியன், கே.விக்னேஷ்மது, ஆர்.சதீஷ்குமார், மருத்துவர் ரமணன் மற்றும் வழக்கறிஞர்கள் மூலமாக மக்கள் நீதிமன் றத்தில் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட சார்பு நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த லோக்-அதாலத் நிகழ்வை, மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 அமர்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டது. 2382 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 1852 வழக்குகளில் இரு தரப்பினர் ஆஜராகினர். 1077 வழக்குகளுக்கு ரூ.24 கோடியே44 லட்சத்து 97 ஆயிரத்து 307 மதிப் பில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்