பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய விருதுநகரில் ரூ.45 லட்சத்தில் நவீன ரோபோ இயந்திரம்

By செய்திப்பிரிவு

பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய ரூ.45 லட்சத்தில் நவீன ரோபோ கருவி ஒன்றை விருதுநகர் நகராட்சிக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியுள்ளது.

விருதுநகர் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகளும், 2,918 மேன்ஹோல்களும்உள்ளன. பல இடங்களில் அடைப்பு ஏற்படுவதால் கழிவுநீர் சாலையில் தேங்கி தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் பணியில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், பாதாள சாக் கடை அடைப்புகளை சரி செய்ய ரூ.45 லட்சத்தில் நவீன ரோபோ கருவி ஒன்றை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விருதுநகர் நகராட்சிக்கு வழங்கியுள்ளது. இந்த இயந் திரத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பார்வையிட்டார்.

இந்நவீன ரோபோ இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகள் சரிசெய்யப்படு வதுடன், மனித கழிவுகளை மனி தனே அள்ளும் நிலை தவிர்க்கப்படும். இந்நிகழ்ச்சியில், மா வட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, ஓ.என்.ஜி.சி.பொதுமேலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்