விருதுநகர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடர் மழையில் வெங்காய பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வெங்காய சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை கூடுதல் இயக்கு நர் தமிழ்வேந்தர் விருதுநகரில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
காரியாபட்டி, நரிக்குடி உள் ளிட்ட 10 கிராமங்களில் 310 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயப் பயிர், மழைநீர் தேங்கியதால் சேதமடைந்தது. தோட்டக் கலைத் துறையினரும், வருவாய்த் துறையினரும் இணைந்து பயிர் சேத பாதிப்பை கணக்கெடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் 1,065 ஹெக்டேர் வெங்காயப் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
தற்போது தோட்டக்கலை சார்பில் வில்லிபுத்தூர், பூவாணி ஆகிய பகுதிகளில் வெங்காய நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இங்கு மானிய விலையில் விவசாயிகள் நாற்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago