இந்திய பெண்கள் ஹாக்கி அணி இந்த ஆண்டு சர்வதேச அளவில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என முன்னாள் பயிற்சியாளர் சி.ஆர்.குமார் தெரி வித்தார்.
ராமநாதபுரம் ஆட்சியர் அலு வலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் சர்வதேச தரத்தில் வேலுமாணிக்கம் செயற்கைப்புல் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச ஹாக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு, இந்திய ஹாக்கி பெண்கள் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சி.ஆர்.குமார், இந்திய ஹாக்கி அணியின் வீரரும், அர்ஜூனா விருது பெற்றவருமான வி.ஜெ.பிலிப்ஸ் ஆகியோர் கடந்த 2 நாட்களாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்திய ஹாக்கி பெண்கள் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சி.ஆர்.குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மைதானம் சர் வதேச தரத்தில் உள்ளது. இதை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற மைதானத்தை அரசு ஏற்படுத்தி வீரர்களை உருவாக்க வேண்டும்.
இந்திய பெண்கள் ஹாக்கி அணி சர்வதேச அளவில் 2010-ம் ஆண்டில் 13-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நமது உணவு முறையே வீரர்களுக்குப் போதுமானது. அதேநேரம், அதிக பயிற்சி எடுக் கும்போது அதற்கேற்ப சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, செயலாளர் சேதுபதி, மாவட்ட ஹாக்கி பயிற்சியாளர் தினேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ், ரமேஷ்பாபு, சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago