அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் தொலைதூர, திறந்த நிலை கல்வி கற்போர் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி வரை சேர்க்கை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் சி.குலசேகரன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "அவிநாசிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வித் துறை அரசாணை எண் 150-ன்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தின் கல்வி கற்போர் உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலமாக, மிகக் குறைந்த செலவில் சமூகத்துக்கு தேவையான படிப்புகளை தொலை நிலை மற்றும் திறந்த நிலை கல்வி மூலமாக வழங்கி வருகிறது. கிராமப்புறத்தில் ஏழ்மை நிலையிலுள்ள மக்கள், குறிப்பாக மாணவிகளுக்கு உயர் கல்வி வாய்ப்பை குறைந்த செலவில், உயர்ந்த தரத்தில் வழங்கும் வகையில் இந்த மையம் செயல்பட உள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக சர்வதேச வணிகத் துறை தலைவர் பாலமுருகன் நியமிக்கப் பட்டுள்ளார்.
கரோனா காலமாக உள்ளதால், தற்சமயம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் இணையவழியில் நடைபெறுகின்றன. தொலைதூரக் கல்வி மூலமாக 38 முதுகலை, 42 இளங்கலை, 20 டிப்ளமோ, 140 சான்றிதழ், குறுகிய கால படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. இவை அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவால் பரிந்துரைக் கப்பட்டும், அரசுப் பணியில் சேர்வதற்கும் ஏற்புடையது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு, அப்பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அவிநாசியை கற்போர் மையமாக தேர்வு செய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். நேரடியாக கல்லூரியிலும் விண்ணப் பிக்கலாம். அஞ்சல் மூலமாக வீட்டு முகவரிக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பிக்க, ஏதேனும் ஓர் அடையாள அட்டை (ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, கடவுச் சீட்டு)ஸ்கேன் செய்யப்பட்ட ஒரு பாஸ் போர்ட் அளவு புகைப்படம், செல்லிடப் பேசி எண், மின்னஞ்சல் முகவரிஅவசியம்.
இணைய வழியிலேயே சேர்க்கைக் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது. 2020 – 2021-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை டிச. 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 9944151592 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago