பனியன் தொழிலாளர்களின் புதிய சம்பள ஒப்பந்த பேச்சு வார்த்தையை காலம் தாழ்த்தாமல் விரைந்து தொடங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து பனியன் சங்கங்க ளின் கூட்டுக் கூட்டம், திருப்பூர் - பெருமாநல்லூர் சாலையிலுள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது. ஏஐடியுசி பனியன் சங்க துணைத் தலைவர் கே.எம். இசாக் தலைமை வகித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் செயல் படும் பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் தொழிற்சாலை சட்டம் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும், ஒரு தொழிற்சாலையில் இரண்டு, மூன்று விதமான அடிப்படையில் போனஸ் வழங்கப்படுகிறது. ஓவர் டைம் வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படுவதில்லை. பல்வேறு நிறுவனங்களில் 12 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகிறது. உற்பத்தி துறையில் ஒப்பந்த முறை இருக்கக்கூடாது. பல நிறுவ னங்களில் சட்ட விரோதமான ஒப்பந்த முறைகள் உள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர் களின் பாதுகாப்புச் சட்டம் அப்பட்டமாக மீறப்படுகிறது. இதுபோன்று செயல்படும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.திருப்பூர் பனியன் தொழிலாளர் களுக்கான சம்பள ஒப்பந்தம் 2016-ம்ஆண்டு போடப்பட்டு, மார்ச் 2020-ல்முடிவடைந்துவிட்டது.
புதிய சம்பளம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை அனைத்து சங்கங்களின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் அளிக்கப்பட்டது. காலம் தாழ்த்தாமல் புதிய சம்பள பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.
திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 18, 21 மற்றும்31-ம் தேதிகளில் தர்ணா போராட் டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago