வேளாளர் சாதிப் பெயரை வேறு சமுதாயத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்து வெள்ளாளர் மகா சபை சார்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து வெள்ளாளர் மகா சபை மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெள்ளாளர் மகா சபை மாநிலச் செயலாளர் கார்த்திகேயன், வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநிலச் செயலாளர் ஹரிஹரன், மகளிர் அணிச் செயலாளர் அன்னலெட்சுமி, தமிழக வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்புத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கையை வலி யுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 100 பெண் கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago