போராட்டத்தில் ஈடு பட்டுள்ள வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் என கொமதேக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் சில சமுதாயங்களை வேளாளர் என்ற பெயரால் அழைக்கப்பட வேண்டுமென மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலம் காலமாக வேளாளர் என்று பெயர் கொண்ட சமுதாயத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வேளாளர் பெயர் கொண்ட சமுதாயங்களை கலந்தாலோசிக்காமல் முதல்வர் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மொத்தத்தில், இந்த அறிவிப்பு மூலம் சாதிகளிடையே முதல்வர் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் வேளாளர்களுடைய உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்காக முதல்வர் எடுத்த முடிவு எதிர்விளைவுகளை நிகழ்த்தும். அடக்குமுறை மூலமாகவோ, அதிகாரத்தின் மூலமாகவோ வேளாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியாது.
எனவே, போராட்டம் நடத்துபவர்களின் கருத்துகளை முதல்வர் நேரடியாக கேட் டறிய வேண்டும், எனத் தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago