கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை அணுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல நிதியைப் பயன்படுத்தி, அரசுப் பள்ளியில் பயிலும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளை, தனியார் பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர் களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும்.
எனவே, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், 5-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் விண்ணப்பத்தைப் பெற, நாமக்கல் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04286-280220 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago