திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி யாளர்கள் அரசின் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் மண்வளம் மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்க ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் தடை விதிக்கப்பட்டு தற்போது வரை அமலில் உள்ளது.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களான பேப்பர் கப், பாலீத்தின் பைகள், நெய்யப்படாத பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், அதிக அடர்வு கொண்ட பைகள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேநீர் கப்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய அரசு தடை விதித்துள்ளதால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, அந்நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள வங்கிக் கடன் தொகையில் 50 சதவீதமும், அதிகபட்சமாக ஒரு நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் வரை (ஏற்கெனவே வழங்கப்பட்ட முதலீட்டு மானியத்துடன் சேர்த்து) பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த மாதம் 24-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, திருப்பத்தூர் மாவட் டத்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தினர், அரசின் நிவாரணம் பெறவும்,கூடுதல் விவரம் தேவைப்படு வோர்கள், ‘‘இணை இயக்குநர்அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416-2242412, 2242513 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்’’ என தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago