நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்தசிறுபான்மை இன மாணவ, மாணவிகளுக் கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 2020-21-ம் கல்வியாண்டில்1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படுகிறது. பள்ளிப் படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் வரையிலும் மற்றும் தொழிற் கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத் தில் ஆன்லைன் மூலமாக விண்ணப் பிக்க டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விவரங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல கத்தை தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago