குத்தகை விவசாய நிலங்களுக்கு பயிர்க் காப்பீடு செய்ய உரிய சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்துக்கு மழை சேதங்களை பார்வையிடுவதற்காக நேற்று வந்த தமிழக முதல்வர் பழனிசாமியிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கனமழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களின் சேதத்தை முறையாகக் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் 5-ல் 2 பங்கு நிலங்கள், கோயில் மற்றும் இதர தர்ம ஸ்தாபனங்களுக்கு சொந்தமானவை. இந்த நிலங்களையும், நீண்ட கால தனியார் நிலங்களையும் பல விவசாயிகள் குத்தகைக்குப் பெற்று, சாகுபடி செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு நடப்பு சாகுபடி சான்று கொடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் மறுப்பதால், இந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்த முடிவதில்லை. எனவே, இவர்களும் பயிர்க் காப்பீடு செய்யும் வகையிலும், அரசு நிவாரணத்தைப் பெறும் வகையிலும், வருவாய்த் துறை கணக்கில் சேர்க்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago