வேலூர் அடுத்த அரியூரில் உள்ள புரம் பொற் கோயிலில் நிவாச பெருமாள் கோயில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி குடமுழுக்கு செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 4-ம் ஆண்டையொட்டி நிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு யாகம், பூர்ணாஹூதி மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று வெகு விமரிசையாக நடை பெற்றன.
இந்நிகழ்ச்சியில், புரம் பொற்கோயில் இயக்குநரும் அறங்காவலருமான சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குநரும் அறங்காவலருமான பாலாஜி மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago