விளையாட்டுடன், கல்வியிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுரை

By செய்திப்பிரிவு

விளையாட்டுடன், கல்வியிலும் மாணவர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் ஜோலார்பேட்டை மற்றும் மண்டலநாயகுண்டா பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக 14 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

இதில், வேலூர், திருப்பத்தூர், திருச்சி, கன்னியாகுமரி, கிருஷ் ணகிரி, திருவள்ளூர், கரூர், பெரும்பலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. லீக் சுற்றின் முடி வில், திருவள்ளூர் மற்றும் கிருஷ் ணகிரி மாவட்ட அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிப் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியை திருவள்ளூர் மாவட்ட அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றிபெற்ற அணி வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் நேற்று நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற திருவள்ளூர் மாவட்ட அணி வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார். அப்போது, அவர் பேசும்போது, "இந்திய அணியில் விளையாடிக்கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். தமிழ்நாடு பிரீமியர் லீக் இல்லையென்றால் நடராஜன் இல்லை. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சை கண்டு ஆஸ்திரேலியா அணி தடுமாறுகிறது.

அதேபோல, ஐபிஎல் போட்டியில் விளையாட, தமிழ்நாடு ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேஷன் மூலம் தமிழகத்திலிருந்து பல வீரர்களை கொண்டு வர வேண் டும். ஆர்வத்துடன் விளையாடு வதைபோல மாணவர்கள் கல்வியிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்