விவசாய நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசு திண்டுக்கல் ஆர்ப்பாட்டத்தில் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

விவசாய நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது என்று ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேசினார்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வேலுச்சாமி எம்.பி., ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஐ.பெரியசாமி பேசும்போது, விவசாய நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது. விவசாயிகளைப் பாதுகாக்கவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.

விருதுநகர்திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி. (வலது) சிவகங்கை அரண்மனைவாசலில் திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் சீனி வாசன், தங்கபாண்டியன், கட்சி நிர்வாகிகள் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை அரண்மனை வாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ்ரூசோ, முன்னாள் எம்எல்ஏ மதியரசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகானி செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன், நகரச் செயலாளர் துரை ஆனந்த், ஒன்றியச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேனி

தேனி பங்களாமேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் எல்.மூக்கையா, மாநிலத் தேர்தல் பணிக் குழுச் செயலாளர் பெ.செல்வேந்திரன், பெரியகுளம் எம்எல்ஏ கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலை வகித்தனர்.

உத்தமபாளையம் புறவழிச் சாலையில் நடந்த ஆர்ப் பாட்டத்துக்கு தெற்கு மாவட்டப் பெறுப்பாளர் கம்பம் என்.ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், இளைஞர் அணிப் பொறுப்பாளர் பாஸ்கரன், நகர் செயலாளர் இப்ராகீம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்