மயானத்துக்கு பொதுப்பாதை கேட்டு இறந்தவர் உடலை வைத்து போராட்டம்

By செய்திப்பிரிவு

இளையான்குடி அருகே மேலாயூரில் ஒரு தரப்பினர் மயானத்துக்கு குளைக்கால் பாதையைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த தரப்பைச் சேர்ந்த கண்ணன் மனைவி நாகஜோதி என்பவர் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் இறந்தார். தற்போது தொடர் மழையால் மயானத்துக்குச் செல்லும் குளைக்கால் பாதையில் தண்ணீர் தேங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் நாகஜோதியின் உறவினர்கள், அவரது உடலை வேறொரு பாதை வழியாகக் கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மயானத்துக்குப் பொதுப் பாதை கேட்டு இறந்தவரின் உடலை வைத்து நாகஜோதியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் ஏற்கெனவே பயன்படுத்திய பாதையில் தான் உடலைக் கொண்டு செல்ல வேண்டுமெனக் கூறி, மற்றொரு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து கோட்டாட்சியர் முத்துக்கழுவன், வட்டாட்சியர் ரமேஷ், போலீஸ் எஸ்ஐ பிரபாகரன் ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பும் சமரசத்தை ஏற்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்