டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தருமபுரி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி, ஓசூரில் திமுக சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தருமபுரி நகரில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் தருமபுரி எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மக்களவை உறுப்பினர் தாமரைச்செல்வன், மாநிலக் குழு உறுப்பினர் விஸ்வநாதன், மாநில ஆதி திராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பென்னாகரம் எம்எல்ஏ இன்பசேகரன் தலைமையில் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மாதையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓசூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். ஓசூர் எம்எல்ஏ சத்யா கண்டன உரையாற்றினார்.

நாமக்கல்

நாமக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் , கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார்.

ஈரோடு

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார்.

மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரக்குமார் உள்பட கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்