திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட் பட்ட ஆடூர்அகரம் ஊராட்சி பரதம்பட்டு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, அரிசி மற்றும் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து, பூவணிகுப்பம் பகுதிகளில் பொதுமக்களுக்கு அரிசி, போர்வை, பிஸ்கெட் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர், தானூர் மேட்டுப் பாளையத்தில் சாலையில் ஓடிய மழைநீரில் நடந்து சென்று, தண்ணீரில் மூழ்கிய விளைநிலங்களை பார்வை யிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து, சிதம்பரம் தனி யார் திருமண மண்டபத்தில் மழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். ஸ்டாலினுடன் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்எல்ஏ, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன் னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், புவனகிரி எம்எல்ஏ சரவணன், முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சிவக் குமார், சிதம்பரம் நகரச் செயலாளர் செந்தில்குமார், பால முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றனர்.
திருவாரூரில் இன்று ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் ஆய்வை முடித்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருவாரூருக்கு நேற்று இரவு வந்தடைந்தார்.திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ள ஸ்டாலின், கனமழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் கச்சனம் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளை இன்று(டிச.6) பார்வையிட்டு, ஆய்வு செய்கிறார்.
அதன் பின்னர், நாகை மாவட் டத்துக்கு சென்று, அங்கு கனமழை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வை யிடுகிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago