வேளாண் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

திருவாரூரில் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், நாகை எம்.பி எம்.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம், மாநிலக் குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் உட்பட 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அப்போது, முத்தரசன் செய் தியாளர்களிடம் கூறியது: தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி விவசாயி களுக்கு எதிரான வேளாண் சட்டத்தை ஆதரித்து வருகிறார். தமிழகத்திலும் சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெறும் நிலையில், போராட்டங்களை தமிழக முதல்வர் கண்டு கொள்ளவில்லை. உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி இச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

மன்னார்குடியை அடுத்த கோட்டூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், சாலையிலேயே உணவு சமைக்க முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங் களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்