வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதால் முருகனின் உடல்நிலை குறித்து சிறைத்துறைக்கு அறிக்கை

By செய்திப்பிரிவு

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல்நிலை குறித்து, சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு அறிக்கையாக சிறைத்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ள அவர், கரோனா ஊரடங்கு காலத்தில் வாட்ஸ்-அப் மூலம் அவரது மனைவி நளினி மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் பேசி வருகிறார்.

குரூப் சாட்டிங்

கடந்த மாதம் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் பேசும்போது, அனுமதிக்கப்பட்ட நபர்களைத் தவிர்த்து வேறு சில நெருங்கிய உறவினர்களிடம் குரூப் சாட்டிங் முறையில் முருகன் பேசியுள்ளார். இந்த விதிமீறல் தொடர்பாக முருகன் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் பேசும் அனுமதியும் அவருக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

டிஜிபிக்கு அறிக்கை

சிறை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து, முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

இது தொடர்பான விவரங்களை வேலூர் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு அறிக்கையாக அனுப்பியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்