கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றில் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிறுவன் உயிரிழப்பு

கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கோமுகி அணையிலிருந்து விநாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கோமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் தடுப்பணையில் திரண்டு வரும் இந்த வெள்ளத்தைப் பார்க்க, அப்பகுதியைச் சேர்ந்த குமார் மகன் ராஜ்குமார்(16), தேவந்திரன் மகன் வரதராஜன்(15) மற்றும் ராமு மகன் அஸ்வந்த்(15) ஆகிய 3 சிறுவர்கள் நேற்று மதியம் சென்றனர். அப்போது, அவர்கள் தடுப்பணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

பெற்றோருக்கு எச்சரிக்கை

"அதிக கன மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. எனவே, பெற்றோர் தங்களது பிள்ளைகளை வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளே வைத்திருக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்” என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் வெள்ளத் தில் போராடி ராஜ்குமாரை மீட்டனர். வரதராஜன் மற்றும் அஸ்வந்த் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்புப் படையினருக்கு அங்கிருநதவர்கள் தகவல் அளித்தனர்.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் வரதராஜன் உயிரிழந்தது தெரிய வந்தது. இவர் மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அஸ்வந்தை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE