புரெவி புயலால் இடிந்து விழுந்த தனுஷ்கோடி தேவாலயச் சுவர்

By எஸ். முஹம்மது ராஃபி

தனுஷ்கோடியில் பழமையான தேவாலயச் சுவர் புரெவி புயலால் இடிந்தது.

இந்தியாவில் இருந்து இலங் கைக்குச் செல்லும் நுழைவு வாயிலாக ஆங்கிலேயர் ஆட்சியில் தனுஷ்கோடி துறைமுகம் 1.3.1914-ல் திறக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, ஆங்கிலேயர் காலத்தில் பவளப் பாறைகள் மற்றும் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு தனுஷ்கோடி தேவா லயம் கட்டப்பட்டது.

22.12.1964-ல் தனுஷ்கோடியை தாக்கிய புயலில் ரயில் நிலையம், துறைமுகக் கட்டிடங்கள், சுங்க நிலையம் உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களும் இடிந்து தரை மட்டமாயின. ஆனால், தேவாலயம் சிறிய அளவில் இடிபாடுகளுடன் தப்பியது. நூற்றாண்டுச் சிறப்பு மிக்க இந்த தேவாலயத்தை காண்பதற்காக தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி வந்து செல்கின்றனர்.

தனுஷ்கோடி புயலுக்குப் பின்னர் இடிந்த நிலையில் உள்ள தேவாலயம், கோயில், மருத்துவமனை, பள்ளிக்கூடம், ரயில்வே கேபின் உள்ளிட்ட கட்டிடங்களை அதன் பழமை மாறாமல் பாதுகாக்கும் வகை யில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நந்தக்குமார் இருந்தபோது மேற்கொண்டது. ஆனால், அவருக்குப் பிறகு வந்த ஆட்சியர்கள் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

இந்நிலையில், புரெவி புயலால் தனுஷ்கோடியில் பெய்து வரும் பலத்த மழையில், நேற்று காலை தேவாலயத்தின் மேற்குப் பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் மக்கள் முன்பே பாது காப்பாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்