தமிழக அரசின் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், மருத்துவக் கல்வி பயில 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டமியற்றியுள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் பயின்ற 10 மாணவ, மாணவியருக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இம்மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்து, புத்தகங்கள் மற்றும் ரொக்கப்பரிசினை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், எம்.எல்.ஏ.கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago