மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதிவிழாவில் இசைக்கவி ரமணனுக்கு பாரதி விருது வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளான டிசம்பர் 11-ம் தேதி பாரதி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், தமிழகம் தழுவிய ஆளுமை ஒருவருக்கு,‘ பாரதி விருது ’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பாராட்டுக் கேடயத்துடன் ரூ.25 ஆயிரம் பொற்கிழியும் உள்ளடக்கியதாகும்.
இந்த ஆண்டு பாரதி விழா வரும் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு ஈரோட்டில் நடக்கிறது. இவ்விழவில், இந்த ஆண்டுக்கான பாரதி விருதினை இசைக்கவி ரமணனுக்கு வழங்கப்படவுள்ளது. இவரது தொடர்ந்த சிறப்புமிக்க பாரதியியல் பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் விருதை வழங்கவுள்ளார். மேலும், மறைந்த இசைமேதை எம்.பி. சீனிவாசனின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த விழா நிகழ்வு, மக்கள் சிந்தனைப் பேரவையின் யு டியூப் மற்றும் முகநூல் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பப்படும், எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago