திருவண்ணாமலை அடுத்த சு.பாப்பாம்பாடி கிராமத்தில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியம் மூலம் கிராமப் புற பால் கொள்முதல் திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்தில் அமைக்கப் பட்ட தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை இந்து சமய அறநிலை யத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலை ஒன்றியத்தில் 6 இடங்களில் ரூ.94 லட்சத்தில் 20,500 லிட்டர் கொள்ளளவுக்கு தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் இன்று (நேற்று) திறக்கப்பட்டுள்ளது.
ஆவின் மூலம் தினசரி 8,600 லிட்டர் பால் மற்றும் மாதந்தோறும் ரூ.75 லட்சம் மதிப்பில் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த நவம்பர் 7-ம் தேதி வரை பால் கொள்முதல் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களுக்கு மாதந்தோறும் 350 டன் கால்நடை தீவனம் மற்றும் 10 டன் தாது உப்பு கலவை வழங்கப்படுகிறது” என்றார்.
இதில், மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago