தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கண்ணணூர் கிராமத்தில் 83 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி நிரம்பி வழிகிறது. ஏரிக்கரை பலவீனமாக உள்ளது என கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “கண்ணணூர் ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பியது. அப்போது ஏரிக்கரை பலவீனமடைந்ததால் மணல் மூட்டைகளை அடுக்கி கரையை பாதுகாத்தோம். ஏரியை சீரமைத்து 40 ஆண்டுகள் கடந்திருக்கும். ஏரி மற்றும் நீர் வரத்துக் கால்வாய் களை தூர்வார வேண்டும் மற்றும்ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும் என ஆட்சியாளர் களுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனாலும் பலனில்லை.
இந்நிலையில், தற்போது ஏரி நிரம்பி உள்ளது. அங்கிருந்து வெளியேறும் உபரிநீர், கங்கை சூடாமணி கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்ல வேண்டும். ஆனால், நீர்வரத்து கால்வாய் தூர்ந்து கிடப்பதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், கண்ணணூர் ஏரிக்கு அருகே உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. நடவு செய்யப் பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளன.
இதற்கிடையில், ஏரிக்கரையும் பலவீனமாக உள்ளது. கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான நிலை உருவாகி உள்ளது. எனவே, ஏரிக்கரை பலப் படுத்த தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் மூட்டை களை அடுக்கி ஏரிக்கரையை பாது காக்க பொதுப்பணித் துறையினர் முன் வர வேண்டும். ஏரிக் கரையில் உடைப்பு ஏற்பட்டால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago