பொன்னையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாது காப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக பொன்னையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கலவகுண்டா ஏரியில் இருந்து உபரி நீரை திறந்து விட்டதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொன்னை அணைக்கட்டில் இருந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் வெள்ளநீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, ராணிப் பேட்டை மாவட்டத்தில் பொன்னையாற்றின் கரை யோரங்களில் வருவாய்த் துறையினர் கண்காணிப்பு பணியை அதிகரித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘பொன்னையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப் புள்ளது. எனவே, அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேங்கியுள்ள நீரில், ஆற்றில் யாரும் குளிக்கச் செல்ல வேண்டாம். ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago