திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலமாக மகளிர் சக்தி விருது அறிவிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது, பெண்களுக்கான சேவை புரிபவர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகிறது.
மகளிருக்கான சுகாதாரம், வழிகாட்டுதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு,துன்புறுத்தல், பெண் குழந்தைபாலின விகிதத்தில் முன்னேற்றம்போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு, சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கபடுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதுக்கு ரூ.ஒரு லட்சம் காசோலைமற்றும் சான்றிதழும், நிறுவனங்களுக்கான விருதுக்கு ரூ.2 லட்சம், சான்றிதழும் வழங்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த தனி நபர்கள், குழுக்கள், நிறுவனங்கள் ஆகியோர் www.narishaktipuraskar.wcd.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, வரும் ஜனவரி 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி டெல்லியில் குடியரசு தலைவரால் விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago