கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதியதாக ‘உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது என மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உழவர் - அலுவலர் தொடர்பு திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. அதன்படி, கிராம ஊராட்சி வாரியாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை களப் பணியாளர்களுக்கான நிரந்தர பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்து தரப்பு அலுவலர்களும் கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளை சந்திக்கும் பயணத் திட்டத்தின் எண்ணிக்கை அதி கரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் 2 பேர் உட்பட குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கங்களும், பயிற்சி களும் உரிய கால இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.
மேலும், வயல் ஆய்வு மேற்கொண்டு, பயிர் சாகுபடி தொடர் பான பிரச்சினைகளுக்கு உரிய பரிந்துரைகள் வழங்கவும், நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், அரசு மானியத் திட்டங்களின் விண்ணப்பங்கள், இதர ஆவணங்களை பரிசீலித்து பரிந்துரை செய்யவும், வானிலை முன்னறிவிப்பு குறித்து விவசாயி களுக்கு தெரிவிக்கவும் உள்ளனர்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், உழவர் - அலு வலர் தொடர்பு திட்டத்தின் மூலம் தங்களது வயல் வெளி பிரச்சினைகளுக்கு தீர்வும், வேளாண்மை மற்றும் சகோதரத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் மானியத் திட்டங்கள் குறித்த விளக்கங்களும் பெற்று பயன் பெறலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago