அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான செயல்முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான செயல்முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் களுக்கு ஓய்வூதியம் பெறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய நிகழ்வாக, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) ஒய்வூதியதாரர்களின் வீட்டுக்கே சென்று ஆயுள் சான்றி தழ் (ஜீவன் பிரமான்) வழங்கும்முறையை அறிமுகப்படுத்தியுள் ளது.
இந்த புதுமையான சேவையை தொடங்குவது மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியம் வழங் கும் நிறுவனத்தின் அலுவலகத் துக்கு நேரடியாக செல்ல தேவை யில்லை. ஓய்வூதியம் பெறுவோர் அருகே உள்ள அஞ்சல் அலுவல கத்துக்கோ அல்லது (IPPB) வழங் கும் வங்கி சேவை மூலமாகவோ ஆயுள் சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.
ஓய்வூதியம் பெறும் அனை வரும் (IPPB) அல்லது வேறு எந்தஒரு வங்கியில் கணக்கு வைத் திருந்தாலும் இந்த சேவையை பெற முடியும். தற்போது, கரோனா ஊடரங்கு நேரம் என்பதால் (IPPB) வங்கி சேவை அதிக வயதான வர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
ஜீவன் பிரமான் என்பது ஓய்வூதி யர்களுக்கான பயோமெட்ரிக் இணைக்கப்பட்ட டிஜிட்டல் சேவையாகும். மத்திய அல்லது மாநில அரசு அல்லது வேறு எந்த ஒரு அரசு நிறுவனத்திடமிருந்தும் ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்" என தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago