நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பாக நாமகிரி்ப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் வ.முகிலரசி, நாமகிரிப்பேட்டை மருத்துவ அலுவலர் கிருஷ்ணசாமி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் முகிலரசி பேசியதாவது:
பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களிலும் ஒரு அறிகுறியாக தோன்றினாலும் சில சமயம் அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அளவுக்கதிகமான பயமும், பதற்றமும், மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. தலை முதல் கால் வரை இதன் பல்வேறு வெளிப்பாடுகள் அறிகுறிகளாக அமையும். பொதுவாக எதிர்பார்ப்பும், எதிர்பார்ப்புக்கு ஏற்ற தயார் நிலையில் இல்லாத போதும்தான் பதற்றம் உருவாகிறது.
தியானம்,யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி இறுக்கம் தளரவும், மனதில் அமைதி நிலவவும் உதவும். மன அழுத்தத்தை குறைக்க டிரஸ் பால் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். உடல், மனம், சமூகம் இந்த மூன்றிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில், கரோனா தடுப்பு முறைகள், போதை பொருள் குறித்த விழிப்புணர்வு மற்றும் மூச்சு பயிற்சியின் நன்மைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago