அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை உயர்வு

By செய்திப்பிரிவு

அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50-ல் இருந்து ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட அலுவலக செய்திக்குறிப்பு:

மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி, அஞ்சல்துறையின் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50-ல் இருந்து, ரூ.500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள், குறைந்தபட்ச இருப்பாக ரூ.500 வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு குறைந்தபட்ச இருப்பு வைக்காவிடின், ஆண்டுதோறும் ரூ.100 வீதம் அபராதக் கட்டணம் கணக்கிலிருந்து கழிக்கப்படும். எனவே, டிசம்பர் மாதம் 11-ம் தேதிக்கு முன்பாக அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்