பெரிய அம்மை நோயால் கால்நடைகள் பாதிப்பு தடுப்பூசி போட அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கும் பெரிய அம்மை நோயினைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட வேண்டும் என உழவர் விவாதக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக உழவர் விவாதக்குழு தலைவர் (பொறுப்பு) சி.எம்.நஞ்சப்பன், செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது;

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கால்நடைகளுக்கு, கடந்த 15 நாட்களாக உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு, பெரிதாகி உடைந்து புண் ஏற்படுகிறது. இந்த புண்ணில் ஈ, காக்கை மொய்ப்பதாலும், புண்ணில் ஏற்படும் அரிப்பு காரணமாக கால்நடைகள் நாக்கு மற்றும் வாய்மூலம் தேய்ப்பதாலும், புண் பெரிதாகி ரத்தக் கசிவு ஏற்படுகிறது.

இதனால், ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானி, நம்பியூர் வட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளின் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, அதிக மருத்துவச் செலவும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் கல்நடைத்துறை மூலம் ஆய்வு மேற்கொண்டு, பெரிய அம்மை நோய் பாதித்த கால்நடைகளை கணக்கீடு செய்து, தடுப்பூசி போடவும், அரசு மூலம் சிகிச்சை அளிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்