ஆதரவற்ற முதியோருக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அம்மையப்பனில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மாநில உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று புத்தாடைகள், இனிப்பு, பழங்கள் மற்றும் ஊட் டச்சத்து பொருட்களை வழங்கினார். பின்னர், அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

மேலும், முதியோர் இல்லத்துக்கு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தி தருவதாக அமைச்சர் உறுதியளித்தார். தொடர்ந்து, முதியவர்களுடன் அமர்ந்து மதிய உணவு உண்டார்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறியது:

தமிழகத்தில் குறுவை சாகுபடி முடிவடைந்து சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளது. நிகழாண்டும் சம்பா சாகுபடி சிறப்பாக நடைபெறும். நடந்து முடிந்த குறுவை சாகுபடியில் வரலாறு காணாத வகையில் 4.51லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ் மொழிக்கு மட்டுமே முதலிடம். முதல்வர் பழனிசாமி ஆட்சியின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அரசும் மக்களுக்கு தேவையான திட்டங்களை வழங்கி வருகிறது. அதிமுகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு இருப்பதால் 2021-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்த லிலும் அதிமுகவே வெற்றிபெறும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்