காவல் துறையில் சிறந்த பணிக்கான விருது மற்றும் அதிசிறந்த பணிக்கான விருது பட்டியலை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதில், அதிசிறந்த பணிக்கான விருது பெறுவோர் பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடலோரப் பாதுகாப்புப் படையின் பட்டுக்கோட்டை பிரிவு துணைக் கண்காணிப்பாளர் டி.பாலமுருகன், எஸ்பிசிஐடி உதவி ஆய்வாளர்கள் ஜெ.மோகன் (தஞ்சாவூர் மாநகரம்), பி.துரைமாணிக்கம் (ஒரத்தநாடு), தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்.பத்மநாபன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சிறந்த பணிக்கான விருது பெறுவோர் பட்டியலில் தஞ்சாவூர் தனிப்படை உதவி ஆய்வாளர் கே.கண்ணன், எஸ்பிசிஐடி தலைமைக் காவலர் கே.மணிவண்ணன் (திருவிடைமருதூர்), நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவு தலைமைக் காவலர் ஆர்.சரஸ்வதி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு எல்.முத்துகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் ஆர்.கே.சரவணன் (தஞ்சாவூர் தெற்கு), ஏ.ஆல்பர்ட் டென்னிஸ் (தஞ்சாவூர் மேற்கு), எம்.ராம்குமார் (ஆயுதப்படை) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago