செண்பகவல்லி அணை உடைப்பை சீரமைக்க கேரள அரசுடன் பேச்சுவார்த்தை வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன் தகவல்

By செய்திப்பிரிவு

வாசுதேவநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அ.மனோகரன் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சட்டப்பேரவை நடைபெறும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று, மக்களின் தேவை அறிந்து முடிந்தவரை உதவிகளை செய்து வருகிறார்.

கரோனா பாதித்த காலத்தில் தனது சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று பணியாற்றிய நிலையில், எம்எல்ஏவுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குச் செல்லாமல், தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்தார். அவரது இந்த செயலும், எளிமையும் பொதுமக்களிடம் பாரா ட்டைப் பெற்றது.

விவசாயம் செழிப்படையும்

தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து மனோகரன் எம்எல்ஏ கூறும்போது, “வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, பள்ளி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கோரியிருந்தனர். அதன்படி, அடிப்படை வசதிகள், பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள், மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

செண்பகவல்லி அணை உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்திருந்தேன். இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அதைத் தொடர்ந்து, இத்திட்டம் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீருவதோடு, விவசாயமும் செழிப் படையும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்