ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும், அரசுப் பள்ளி மாணவர்கள் 235 பேர் நீட் தேர்வு எழுதி இருந்தனர். தேர்வு முடிவுகளின்படி 6 பேர் மருத்துவக் கல்விக்கான நேரடி தகுதி பெற்றனர், 15 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 11 மாணவிகள், 10 மாணவர்கள் என 21 பேர் மருத்துவக் கல்வியைப் பெற தகுதி பெற்றுள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும் வகையில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago